1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (16:04 IST)

பிக் பாஸ் கலாட்டா ; ஜூலியை டார்கெட் செய்யும் நடிகைகள் - வீடியோ

நடிகர் கமல்ஹாசன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.  


 

 
இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று விஜய் தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. 
 
அதில் நடிகை ஆர்த்தி, காயத்ரி ரகுராமிடம் ‘அரசியல்வாதிகளை திட்டியே ஜூலி பேமஸ் ஆகிட்டா... கேமரா அவள மட்டுமே காட்டனும்னு நினைக்கிறா.. நாமெல்லாம் வெறும் பேக்ரவுண்ட் டேன்சர்தான்..” என சொல்கிறார். மேலும் காயத்ரி ரகுராம் மற்றும் நமீதா ஆகியோரும் ஜூலியை திட்டுகின்றனர்” 
 

 
இது தொடர்பான முழு வீடியோ இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எனத் தெரிகிறது.