1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (15:31 IST)

தமிழக போலீசாருக்கு நடிகர் விவேக் பாராட்டு

தமிழக போலீசாருக்கு நடிகர் விவேக் பாராட்டு

சுவாதி கொலைக்கு காரணமான குற்றவாளியை பிடித்த தமிழக போலீசாருக்கு நடிகர் விவேக் மனதார பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்,கடந்த ஜூன் 24 ம் தேதி, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். ஆனால், கொலைக்கு காரணமான குற்றவாளி குறித்து தகவல் கிடைக்காமல் போலீசார் தவித்து வந்தனர்.
 
இந்த நிலையில், சுவாதி கொலைக்கு காரணமான ராம்குமார் என்பவரை நெல்லையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
 
போலீசாரின் இந்த அதிரடி வேகத்தை கண்டு முதல்வர் ஜெயலலிதா முதல்பாராட்டு தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழக போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டரில், குற்றவாளியை கண்டு பிடித்த தமிழக போலீஸின் இடையறாத உழைப்பு, திறமைக்கு நம் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.