1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (12:15 IST)

நடிகர் விஜய் ரசிகர்கள் திடீர் கைது

நடிகர் விஜய் ரசிகர்கள் திடீர் கைது

குடிபோதையில் தகராறு செய்த நடிகர் விஜய் ரசிகர்களை  போலீஸார் கைது செய்தனர்.
 

 
நடிகர் விஜய் பிறந்த நாள் தமிழகம் முழுக்க ஆட்டம் பாட்டம், நலத்திட்ட உதவுகள் என கொண்டாட்டப்பட்டது. இந்த நிலையில், சென்னை குமரன் நகரில் நடிகர் விஜய் பிறந்த நாள் நள்ளிரவு 12 மணிக்கு அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இது குறித்து குமரன் நகர் காவல் தமிழ்ச்செல்வன் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி காவலர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து திருச்சியைச் சேர்ந்த முருகேசன், கதிரேசன், வெங்கடேசன், குமரேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.