1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actor Thadi Balaji will join in DMK

திமுகவில் இணைய உள்ள நடிகர் தாடி பாலாஜி!

திமுகவில் இணைய உள்ள நடிகர் தாடி பாலாஜி!

திமுக
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பிரபல நடிகர்கள் பலரின் படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவருமான நடிகர் தாடி பாலாஜி விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
சமீபத்தில் நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
 
இதனையடுத்து அவர் விரைவில் திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் மனைவி தன் மீது கொடுத்திருக்கும் புகாரை சமாளிக்கத்தான் அவர் இப்படி செய்கிறாரா என்ற பேச்சும் அடிபடுகிறது.
அடுத்த கட்டுரையில்
இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு: மிரட்டும் அதிமுக அமைச்சர்!