நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா!
நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை புறக்கணித்த நடிகர் சூர்யா சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
நடிகர் சங்கம் போராட்டம் அறிவித்ததும் எங்கள் போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம் என போராட்டக்குழு கூறியது. ஆனால் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பங்குபெற இருக்கும் இந்த போராட்டத்தை நடிகர் சங்கம் நிறுத்தாமல் தங்கள் ஆதரவை போராட்டம் மூலம் காண்பித்து வருகிறது.
இந்த போராட்டத்தில் நடிகர் சூர்யா அட்டெண்டென்ஸ் மட்டும் போட்டுவிட்டு, அதனை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்தும் மக்கள் போராட்டத்தில் மக்களில் ஒருவனாக கலந்து கொண்டார் நடிகர் சூர்யா.