வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (18:53 IST)

ஜெயலலிதா குணமடைய கமல்ஹாசன் வாழ்த்து

ஜெயலலிதா குணமடைய கமல்ஹாசன் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளர்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
 
அவர் உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரதமர் மோடி, ஆளுநர், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், வைகோ உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மாண்புமிகு முதல் அமைச்சர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.