காவிரி விவகாரம்; வெட்கப்படும் நாள் வரும் : கமல்ஹாசன் வேதனை
காவிரி விவகாரம்; வெட்கப்படும் நாள் வரும் : கமல்ஹாசன் வேதனை
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது தொடர்பாக, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்து. தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 50 பேருந்துகள் மற்றும் 10 லாரிகளுக்கும் மேல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இந்நிலையில், இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.