1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (18:03 IST)

நட்சத்திர ஹோட்டலில் அதிரடி ரெய்டு ...பல லட்சம் மதிப்புள்ள காயின் பறிமுதல்...

ஊட்டி நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கேசினோ ராயல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர், அங்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதியில் உள்ளது. இந்த ஓட்டலில் மும்பை, கோவா போன்ற இடங்களில் நடைபெறும் கேசினோ ராயல் சூதாட்டம் இங்கு நடைபெறுவதாவும், கர்நாடகா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து  சூதாடுவதாகவும் போலீஸாருக்கு தகவல் வந்தது.
 
இதனையடுத்து நேற்று நள்ளிரவில் போலீஸார் அந்த ஹோட்டலில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது தனிப்படை போலிஸார் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.குறிப்பாக அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் 2 கார்கள், மேலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.45 ஆயிரம் ஆகும்.
 
மேலும் கைது செய்தவர்களிடம்  போலீசார்  தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகின்றன. 
 
ஊட்டியில் பிரபல ஹோட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.