திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (11:38 IST)

திருச்சி அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி

திருச்சியில் சுங்க சாவடி அருகே நின்று கொன்றிருந்த லாரி மீது ஒரு கார் வேகமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் காரில் நேற்றி நள்ளிரவில் திருச்சிக்கு சென்றனர். திருச்சி சமயபுரம் சுங்கசாவடி அருகே சென்ற போது சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அந்த கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 
 
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.