வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (09:06 IST)

Dr. அப்துல் கலாம் நினைவு தினம்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


அப்துல் கலாம் வரலாறு
அப்துல் கலாம் 1931, அக்டோபர் 15 ஆம் தேதி இராமேஸ்வரத்தில் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15,1931-ம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.

அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தனது 83வது அகவையில் காலமானார். 

இந்தியாவின் ஏவுகணை மனிதர்
1960 ஆம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார்.

பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அப்துல் கலாம் அழைக்கப்பட்டார். 

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

மக்களின் ஜனாதிபதி:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார்.

மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 3 வது குடியரசுத் தலைவராவார். 

அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை. மேலும், பாரத் ரத்னா, பத்மா விபூஷன், பத்ம பூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

 
அப்துல் கலாமின் சிந்தனை துளிகள்:
  • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்
  • ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம்.
  • துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.
  • வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
  • கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னை தூங்கவிடாமல் செய்வதே.
  • ஒரு மனுஷன் பிரியும்போது அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவன் பிள்ளை அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன்,  அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன்.