1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 12 ஜூலை 2017 (12:13 IST)

ஆர்த்திக்கு ரசிகர்கள் வைத்த ஆப்பு - பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜுலியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கடி அவரிடம் ஆக்ரோஷமாக பேசி அவரை அழ வைத்ததன் மூலம், அந்த நிகழ்ச்சியை காணும் ரசிகர்களின் ஆதரவை நடிகை ஆர்த்தி இழந்துள்ளார்.


 

 
விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதல்,  ஜூலியின் மீது வெறுப்பு காட்டிக் கொண்டே இருந்தார் ஆர்த்தி. தேவையில்லாத விஷயங்களை அடிக்கடி பேசி ஜூலியை அழ வைத்தார். இதனால், இந்த ரிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆர்த்தி மீது வெறுப்பு ஏற்பட்டது. அதேபோல், ஜூலி மீது பரிவும் ஏற்பட்டது.
 
மேலும், கூகுளில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு யாரும் வாக்களிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒருவர் 50 ஓட்டுகள் போட முடியும். அதில் பலரும் ஜூலி, ஓவியா, வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோருக்கு வாக்களித்து வருகின்றனர். ஆர்த்திக்கு அவ்வளவாக யாரும் வாக்களிப்பதில்லை. மேலும், அவருக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
 
அதேபோல், யாரை வெளியேற்ற வேண்டும் என வரிசையில் ஆர்த்தியின் பெயரையும், அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, சுதாரித்த ஆர்த்தி, எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ‘ எனக்கு எப்படியாவது அதிக ஓட்டு போடுங்கள்’ என கேமரா முன் மக்களிடம் கெஞ்சினார். மேலும், நேற்று சில செண்டிமெண்ட் காட்சிகளையும் அரங்கேற்றினார். எனக்கு பின் நீ எப்படி வாழப்போகிறாய் என நான் பார்க்க வேண்டும் என என் தந்தை கூறியதால்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தேன்’ என அழுது கொண்டே பேசினார். 
 
இதை ரசிகர்கள் யாரும் ரசிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்து ஜூலியை அழ வைத்து பார்த்த அவரின் அழுகையை பலரும் கிண்டலடித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்களின் ஆதரவை இழந்து வருவதால் அவரும் விரைவில் வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது.