1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 அக்டோபர் 2019 (08:20 IST)

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை குறித்து அறம் இயக்குனர் கூறிய கருத்து

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு இடத்தில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்தது. இந்த குழந்தையை உயிருடன் மீட்க தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் நேற்று இரவு முதல் போராடி வருகின்றனர் 
 
ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணற்றை சுற்றி பள்ளம் தோண்டுதல், நவீன கருவிகள் மூலம் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தல், கயிறு கட்டி இழுக்கும் முயற்சிகள் என மீட்புப் படையினர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் குழந்தை ஏழு மணி நேரத்துக்கும் மேலாக பள்ளத்தில் இருப்பதால் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகவும், அதனால் நவீன இயந்திரத்தின் மூலம் குழந்தையை வெளியே எடுக்க முடியவில்லை என்றும், மீண்டும் கட்டி இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர் 
 
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்றை மீட்கும் போராட்டம் குறித்து அறம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அவர்கள் இதுகுறித்து கூறியதாவது:
 
ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும் என்றும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும் என்றும், ஜேசிபி போன்ற இயந்திரங்கள், குழந்தையை மீட்பதற்கான இயந்திரம் கிடையாது என்றும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க ஏன் பு​​திய இயந்திரங்களை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.