வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 23 மார்ச் 2024 (11:29 IST)

டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு.. கைது செய்யப்படுகிறாரா?

enforcement directorate
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் இந்த சோதனைக்கு பின்னர் அவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த சில மணி நேரங்களாக சோதனை செய்து வருகின்றனர். குலாப் சிங் யாதவ் ஆம் ஆத்மியின் குஜராத் மாநிலத்திற்கான பொறுப்பாளராக இருந்து வரும் நிலையில் நடைபெறவுள்ள
லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இந்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக குலாப் சிங் யாதவ் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு கூறி இருக்கும் நிலையில் குஜராத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதால் போட்டி சவாலாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான்  ஆம் ஆத்மி   கட்சியை நிலைகுலைய வைக்க அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Edited by Mahendran