புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (11:52 IST)

இளம்பெண்ணின் உல்லாச மோகம்: குடும்பத்தையே சீரழித்த சம்பவம்

இளம்பெண் ஒருவரின் உல்லாச மோகத்தால் அவரது குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கொடியரசி. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொடியரசிக்கு எதிர்வீட்டு வாலிபரான செந்தில்குமாருடன் தகாத உறவு இருந்துள்ளது.
 
இதனையறிந்த பார்த்திபன், தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத கொடியரசி தொடர்ந்து செந்தில்குமாரிடம் பேசி வந்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த புத்தாண்டு நள்ளிரவு அன்று கொடியரசி செந்தில்குமாருடன் போனில் சிரிச்சு சிரிச்சு பேசியுள்ளார். இதனைப்பார்த்த பார்த்திபன் கடும் கோபமடைந்து கொடியரசியிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் கொடியரசி தூங்க சென்றுவிட்டார்.
 
கோபத்தின் உச்சத்தில் இருந்த பார்த்திபன், தூங்கிக்கொண்டிருந்த கொடியரசியின் கழுத்தை அறுத்தார். கொடியரசி உயிருக்கு போராடுவதை பார்த்த பார்த்திபன் தாமும் தற்கொலைக்கு முயற்சித்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.