வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (15:43 IST)

கிழவனின் காமவெறி: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... சிக்கிய பெண் புரோக்கர்!!!

16 வயது சிறுமியை 66 வயது கிழவன் உட்பட பலர் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது ஏழை சிறுமியை அவரது வீட்டிற்கு எதிரே வசித்து வந்த வேளாங்கன்னி என்ற பெண் வேலை வாங்கித்தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களது பெற்றோரிடம் சிறுமிக்கு குழந்தை பார்த்து கொள்ளும் வேலை என கூறி அவர்களிடம் 5000 ரூபாயை அட்வான்ஸாக கொடுத்துள்ளார்.
 
சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்த வேளாங்கன்னி சிறுமியை பல ஆண்களுக்கு இரையாக்கியுள்ளார். கொடுமை என்னவென்றால் 66 வயது கிழவன் ஒருவனும் அந்த சிறுமியை சீரழித்துள்ளான். இதுகுறித்து வெளியே சொன்னால் ஊரில் உள்ள குடும்பத்தை அடியோடு காலி பண்ணிடுவேன்னு மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
 
இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே அவர்கள் பெண் புரோக்கர் வேளாங்கன்னியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை சீரழித்த அந்த 66 வயது கிழவன் உட்பட பலரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.