செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (08:36 IST)

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் காரணமாக திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளியூர்களிலும் வெளிமாநிலங்களில் இருந்து பணி புரிந்து கொண்டிருந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். மேலும் ஹோட்டல்கள் உள்பட கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் உண்ண உணவின்றி வேலை இன்றி, வருமானம் இன்றி தவித்தனர் 
 
இதனை அடுத்து வேறு வழியின்றி கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்ல பலர் முடிவு செய்தனர். அந்தவகையில் டெல்லியில் இருந்து உத்திரபிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களுக்கு நட்நது சென்றவர்கள் சிலர் நடந்து செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவங்களும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் படித்துக் கொண்டிருந்த தமிழக மாணவர்கள் சிலர் தமிழகத்திற்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர். அவ்வாறு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது 22 வயதான மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். உயிரிழந்த மாணவரின் பெயர் பாலசுப்பிரமணி லோகேஷ் என்பதும் அவர் தமிழத்தின் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.