1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (23:18 IST)

மாணவன் ஒருவர் நூதனமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு

karur
திண்பண்டங்கள் மீது 'ஸ்டேப்ளர் பின்'  அடிக்க தவிர்க்க நடவடிக்கை  எடுக்க கோரி, தனியார் பள்ளி மாணவன் ஒருவர் நூதனமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
 
கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்வக் நித்தின் தனியார் பள்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் விரும்பி உண்ணக்கூடிய கடலை பட்டாணி உள்ளிட்டவைகளில்  பிளாஸ்டிக் பையில் வைத்து  ஸ்டேப்ளர் அடித்து அதை நூதன முறையில் எடுத்துக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியிரிட  மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளி விட்டு வரும் வகையில் ஐந்து ரூபாய் கடலை பாக்கெட் ஒன்று வாங்கி சாப்பிட்டேன் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட அந்த கடலை பாக்கெட்டில் ஸ்டேப்ளர் பின் அடிக்கப்பட்டிருந்தது. 

நான் கடலை தின்னும் போது எனது தொண்ட கடும் வலி ஏற்பட என் பெற்றோர் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்போது மருத்துவர்களிடம் சிக்கிய ஸ்டேப்ளர் பின்னை அகற்றினர்.

இதனால் கடமையான உடல் உபாதை ஏற்பட்டது. எனவே இனி சிறு குழந்தைகள் சிறுவர்கள் தின்னும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் போது ஸ்டேப்ளர் பின் அடிப்பதை தவிர்க்க வேண்டும் அதற்கு மாற்று நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.