புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (19:43 IST)

வாஷிங் மெஷினில் ஹிஸ்ஸ்ஸ்…சுருண்டு கிடந்த நாகராஜா

புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு வாஷிங் மிஷினுக்குள், பாம்பு சுருண்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியாங்குப்பம் அருகே உள்ள காக்காயன் தோப்பு பகுதியில், சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். 63 வயதான இவர், ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் சார்லஸின் மனைவி துணி துவைப்பதற்காக அவர்களது வீட்டில் உள்ள வாஷிங் மெஷினை இயக்க முயற்சித்தார். ஆனால் வாஷிங் மெஷின் வேலை செய்யவில்லை.

உடனே இதை தனது கணவர் சார்லஸிடம் தெரிவித்துள்ளார். பின்பு சார்லஸ் டார்ச் லைட் வாஷிங் மெஷின் உட்புறம் பார்த்துள்ளார். அப்போது வாஷிங் மெஷின் உட்பகுதியில் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது தெரியவந்தது.

இதனை பர்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ், உடனடியாக புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனத் துறை ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் சார்லஸ் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர்.

பின்பு வாஷிங் மெஷின் மெக்கானிக் உதவியுடன் வாஷிங் மெஷினை கழற்றி, உள்புறம் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். வெளியே எடுத்த போது அந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் இருந்ததாகத் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பாம்பை வனத்துறையினர் அவர்களது அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.