1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:33 IST)

திருச்சியில் தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

Accident

சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தலைநகர் சென்னைக்கு தினசரி அரசு, தனியார் பேருந்துகள் பல இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறாக திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் 27 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

 

தனியார் பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்து சென்றுக் கொண்டிருந்தபோது பேருந்தின் டயர் வெடித்துள்ளது. தொடர்ந்து பேருந்தில் தீப்பற்றியுள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வெளியேறி சில நிமிடங்களில் மளமளவென தீப்பற்றிய பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K