திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (10:09 IST)

சொத்துத் தகராறில் அண்ணன் மனைவி குத்திக் கொலை

திருவண்ணாமலையில் சொத்து தகராறில் அண்ணன் - தம்பிக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கப்போன அண்ணன் மனைவியை,  தம்பி கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது தம்பி வெங்கடேசன். கண்ணனுக்கும் வெங்கடேசனுக்கும் இடையே சொத்து பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
 
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வீட்டுமனை தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர். கண்ணனுக்கு ஆதரவாக வந்த அவரது மனைவி ராணியை, அண்ணி என்றும் பாராமல் வெங்கடேசன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ராணி நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
 
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து ராணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.