திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (09:14 IST)

ஆபாச சிடியை தள்ளுவண்டியில் வைத்து விற்றவர் கைது!

திருப்பூரில் தள்ளுவண்டியில் வைத்து ஆபாச சிடிகள் மற்றும் புத்தகங்கள் விற்றவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்களுக்கு சிலர் ஆபாச டிவிடி மற்றும் ஆபாச புத்தகங்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த கைது நடந்துள்ளது.


 
 
காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சில நாட்களாக அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். இதனையடுத்து நேற்று ஒருவர் தள்ளுவண்டியில் ஆபாச டிவிடி விற்பனை செய்யும்போது அந்த இடத்திலேயா காவல் துறையினர் கைது செய்தனர்.
 
அந்த தள்ளுவண்டியில் அவர் புத்தகத்தில் மறைத்து வைத்து சிடிகளை விற்றுள்ளார். அவரிடம் இருந்து 30 ஆபாச டிவிடி மற்றும் ஆபாச புத்தகங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
ஆபாச சிடிகள் மற்றும் புத்தகங்களை விற்றவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் காங்கேயம் பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி என தெரியவந்துள்ளது.