வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:17 IST)

’கொடூரம்’ – பெங்களூரு கலவரத்தில் பிரியாணிக்காக 42 பேருந்துகளை எரித்த பெண்!

காவிரி பிரச்சனையில் தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் பேருந்துகள் பெங்களூருவில் எரிக்கப்பட்டது.


 
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தை பற்றி அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒரு மட்டன் பிரியாணிக்காகவும், நூறு ரூபாய் பணத்திற்காகவும், பாக்யா என்றா 22 வயது பெண் ஒருவர் 42 பேருந்துகளை எரித்துள்ளார் என்பது விடியோ பதிவுகள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடுத்து, கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்த இந்த பேருந்து எரிப்பில் தொடர்புடைய, மேலும் 10 நபர்கள் பாக்கியாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாக்யாவின் தாயார் எல்லம்மா கூறியதாவது, ”வீட்டில் இருந்த என் மகளை, சிலர், எங்களுடன் போராட்டத்துக்கு வந்தால், நூறு ரூபாயும், மட்டன் பிரியாணியும் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.” என்றார்.

பெங்களூருவில் நடந்த இந்த கலவரத்தில், இது வரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பாக்யா ஒருவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.