அரசு பள்ளிக்கு ரூ.27 லட்சத்தில் பஸ் வழங்கிய முன்னாள் மாணவர்!
சிவகங்கையை அடுத்த வெற்றியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் கருங்குளம் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 184 மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.
மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வர வசதியாக முன்னாள் மாணவர் டாக்டர் முருகேசன், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோர் ரூ.27 லட்சத்தில் பள்ளிக்கு புதிய பஸ் வாங்கிக்கொடுத்தனர்.
இந்த பஸ் தொடக்க விழா சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.
புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.