வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (14:40 IST)

கட்டிங், ஒட்டிங் செய்து தினகரனுக்கு ஓட்டு கேட்கும் ஜெ. : இது தான் அந்த வீடியோவா!

கட்டிங், ஒட்டிங் செய்து தினகரனுக்கு ஓட்டு கேட்கும் ஜெ. : இது தான் அந்த வீடியோவா!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் வீடியோ ஒன்றை அதிமுக அம்மா அணியின் ஐடி பிரிவி வெளியிட்டுள்ளது.


 
 
டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதி எம்பியாக போட்டியிட்ட போது அவரை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். இந்த வீடியோவைத்தான் தினகரன் கொஞ்ச நாட்களாக தேடி வருவதாக தகவல்கள் வந்தன. இதனை வைத்து ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்யலாம் என்ற திட்டத்தையும் வகுத்தனர்.
 
இந்நிலையில் இந்த வீடியோவை எப்படியோ தேடி கண்டுபிடித்த தினகரனின் ஐடி விங் அதில் சில எடிட்டிங் வேலைகளை செய்து வெளியிட்டது. அதாவது டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுகிறார். அதே போல கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி கேரளாவில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டது, இதற்கு ஜெயலலிதா பிரச்சாரமும் செய்தார்.

 
டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதாவின் வீடியோவில் தொப்பி சின்னத்தில் அவர் வாக்களிக்க சொல்லும் ஆடியோவும் அங்கங்கு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் டிடிவி தினகரன் நல்லவர், வல்லவர், பண்பாளர் என புகழும் ஜெயலலிதாவின் இளமை குரலில் தொப்பி சின்னத்தில் வாக்களிக்க சொல்லும் ஜெயலலிதாவின் முதுமை குரலை சேர்த்திருப்பது பொருத்தமில்லாமல் இருக்கிறது.