திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (17:40 IST)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள நகைக்கடையில் தீ விபத்து!

fire accident
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் செயல்பட்டு வரும் வெள்ளி நகைகடையில் இன்று வழக்கம் போல்  மதிய உணவுக்கு ஊழியர்கள்  கடையை அடைத்து சென்ற பொழுது திடீரென்று கடையில் உள்ளிருந்து கரும்புகை வெளியாகி உள்ளது


 
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தவுடன் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீ அடுத்தடுத்து பரவாதவாறு தீயை அணைத்தனர்.

தொடர்ந்து இந்த விபத்து கடையினுள் குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக  விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.