செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (14:13 IST)

15,000 பேருக்கு சுட சுட கறி விருந்து..! 2500 கிலோ கறி, 1000 கிலோ அரிசி.. விடிய விடிய நடந்த சமபந்தி விருந்து..!

meat
நாமக்கல் அருகே கோவில் திருவிழாவையொட்டி  விடிய விடிய நடைபெற்ற சமபந்தி விருந்தில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே போதமலை அடிவாரத்தில் கள்ளவழி கருப்பனார் கோயில் உள்ளது. காலம் காலமாக வறட்சி இன்றி மக்கள் விவசாயத்தில் செழித்து வாழ இந்த கோவிலில்  ஆண்டுதேறும்  தை கடைசி வாரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம்.  அதே போல் இந்த ஆண்டும் முப்பூஜை திருவிழா  விமர்சியாக நடைபெற்றது.
 
கள்ளவழி  மலை மேல் இருக்கும் கருப்பனார் கோயிலில் சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டனர். 


rice
மேலும் காவு சோறு கூறை விட்டு விசேஷ பூஜை செய்தனர்.  மேலும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி, ஆடு, கோழி மற்றும் பன்றி கொண்டு வந்து சுவாமிக்கு  பலியிட்டு காணிக்கை செலுத்தினர்.


1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றி கறி, 100 கிலோ கோழிக்கறி என 2500 கிலோ சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது.   இந்த விருந்தில்  சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.