செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:17 IST)

காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்: தூக்கில் தொங்கிய காதல் ஜோடி

காதலுக்கு இரு வீட்டாரும் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த ஹேமந்த்(26) என்ற வாலிபர் சூட்டம்மா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, அவர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.