செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (23:07 IST)

குளித்தலை சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

bjp
பாரதிய ஜனதா கட்சியின் அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கரூர், வெண்ணமலை மீனா மஹாலில் நடைபெற்றது. மேலும்  கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மகாதானபுரம், மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 
மாவட்ட தலைவர் திரு. V.V.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் திரு. சிவசுப்பிரமணியன் அவர்களும், மாநிலத் துணைத் தலைவரும், பெருங்கோட்ட  பொறுப்பாளருமான திரு. கே.பி. ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
 
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும், தீபாவளி பரிசாக வேஷ்டி, சட்டை,சேலை மற்றும் இனிப்புகள்,காரம் ஆகியவற்றை மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் அவர்கள் வழங்கினார்.
 
மேலும்  உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்துவது எனவும்,  வருகின்ற 27ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு  தெரியப்படுத்தவும், தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திறனற்ற திமுக  அரசைக்   கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறுகிறது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டல்களில் இருந்தும் பெருமளவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்  எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Edited by Sinoj