1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (11:00 IST)

வேறு ஆண்களுடன் பழகிய கள்ளக்காதலி.. குத்திக் கொன்ற கள்ளக்காதலன்! – தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!

crime
வேறொருவரின் இரண்டாவது மனைவியை ரகசியமாக காதலித்து வந்த விவசாயி அந்த பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தர்மபுரி மாவட்டம் தேக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான ராஜாராம் என்பவருக்கு ஜெயமணி, செல்வி என இரு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியான ஜெயமணிக்கு பாறவளவு கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்ற விவசாயம் செய்யும் நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் ரகசிய காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் ஜெயமணியின் கணவர் ராஜாராமுக்கு தெரிய வர அவர் ஜெயமணியை கண்டித்துள்ளார். இதனால் ஜெயமணி தனது கள்ளக்காதலன் மனோகரனிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் ஜெயமணி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வராததால் அவரை உறவினர்கள் தேடியபோது வனச்சாலை பெரிய மேடு பகுதியில் ஜெயமணி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


இதுதொடர்பாக தகவலறிந்த போலீஸார் வேகமாக வந்து ஜெயமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஜெயமணியின் கள்ளக்காதலன் மனோகரனை விசாரித்தபோது அவர்தான் ஜெயமணியை கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

சமீப காலமாக ஜெயமணி தன்னை தவிர்த்ததாலும், வேறு சில ஆண்களுடன் அவர் பழகி வந்ததாலும் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். வேறு ஒருவர் மனைவியுடன் ரகசிய காதலில் இருந்துவிட்டு அவர் நடத்தையை சந்தேகப்பட்டு கள்ளக்காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K