1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A 4 month babys head injured in cot and dead

கட்டிலில் தலை மோதி 4 மாத குழந்தை பலி

மதுரவாயல்
மதுரவாயலில் தொட்டிலை ஆட்டிய போது, எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை கட்டிலில் மோதி, குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயலைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு லோகேஸ்வரி(4) என்ற மகளும், பிரகதீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் இருந்தது.
 
5 நாட்களுக்கு முன்,  சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அழுதுள்ளது. இதையடுத்து லோகேஸ்வரி குழந்தையை தூங்கவைப்பதற்காக தொட்டிலை வேகமாக ஆட்டியுள்ளார். அப்போது அருகிலிருந்த கட்டில் மீது குழந்தையின் தலை மோதியிருக்கிறது. இதனை அசால்டாக விட்டு இருக்கிறார் லோகேஸ்வரி.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் குழந்தையின் தலை வீங்கி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் பிரகதீஸ்வரனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பிரகதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தால் குழந்தையின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பாலாஜி மனைவியிடம் பேசிய சிம்பு - கணவருடன் இணைவாரா நித்யா?