செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சென்னை , வெள்ளி, 31 மே 2024 (11:22 IST)

மறைந்த தர்மலிங்கம் 9- ஆம் ஆண்டு நினைவேந்தல்!-ஆர். நல்லகண்ணு,பழ நெடுமாறன் ஆகியோர்கள் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்!

சென்னை,  கோயம்பேடு கனி அங்காடி வளாகத்தில் மறைந்த தர்மலிங்கம் 9- ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
 
த.மணிவண்ணன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலவர் இரத்தினவேலன் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
சிறப்பு அழைப்பாளர்களாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  ஆர்.நல்லக்கண்ணு மற்றும்  உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ நெடுமாறன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மறைந்த தர்மலிங்கம் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இதனைத் தொடர்ந்து சுமார்  ஆயிரம் பேருக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள  இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தனர்
 
இதைனையடுத்து  கல்வி உதவி தொகை மற்றும் 2000 தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது 
 
இந் நிகழ்வில், இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜி லிங்கம், ரோஜா முத்தையா கல்வி ஆராய்ச்சி நிலைய இயக்குனர்  சுந்தர் கணேசன், யா.அருள்,ஆவல் கணேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.