1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 மே 2016 (10:08 IST)

103 சிறை கைதிகளில் 97 பேர் பாஸ் - +2 தேர்வில் சாதனை

தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 103 சிறைவாசிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். இதில், 97 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 

 
இவர்களில் 94 பேர் ஆண்கள்; 3 பேர் பெண்கள். இவர்களில் பாளையங்கோட்டை சிறைவாசியான பாபநாசம் 1084 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
 
திருச்சி சிறைவாசி ஒமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள உமர் பரூக்கான் 1048 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.