1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (16:33 IST)

9 வயது சிறுமியை சீரழித்த கொடூரன் - பகீர் சம்பவம்

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி , தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமையை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் அவருக்கு 7 வருடம் சிறைத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் என்ற பகுதியை சேர்ந்த செந்தில், கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி , தன் வீட்டுக்கு வெளியே ஒரு சிறுமி விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தார். அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கித்தருவதாக ஆசை காட்டி, கட்டிட வேலை நடந்துவரும் ஒரு வீட்டுக்குள் கூப்பிட்டார்.ஆனால் சிறுமி மறுத்து வீட்டுக்குள் ஒளிந்து கொண்டார்.பின்னர் நீண்ட நேரம் காத்திருந்த செந்தில், சிறுமி  வீட்டில் இருந்து வெளியே வந்ததும், அவளை தூக்கிக்கொண்டு தன் வீட்டுக்குள் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
 
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலிஸிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செந்தில் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்த நிலையில், செந்திலுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அத்துடன் ரூ. 10 ஆயிரம் ருபாய் அபராதம் செலுத்துமாறு  தீர்ப்புன் அளிக்கப்பட்டது. ஒருவேளை   அபராதத்தொகை கட்ட தவறினால் ஒரு வருடம் கூடுதல் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஜெயந்தி.