செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2016 (16:21 IST)

85 வயது பாட்டிக்கு பாலியல் சித்ரவதை: வாலிபர் கைது

கோவையைச் சேர்ந்த 85 வயது பாட்டி பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த மணிப்பூர் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கோவையைச் சேர்ந்த பழனியம்மாள்(85) என்பவர் கணவர் மறைவுக்கு பிறகு தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கியிருந்தனர். கடந்த 19ஆம் தேதி பழனியம்மாள் கொலை செய்யப்பட்டார்.
 
அவர் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மனிப்பூரை சேர்ந்த சமீர் கான்(23) என்பவர்தான் பழனியம்மாளை கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இன்று காலை அந்த வாலிபரை கைது செய்தனர்.
 
மேலும் சமீர் கான் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.