1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (07:36 IST)

தென் மாவட்டங்களுக்கு 8 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு.. 2 பெண் வீராங்கனைகளும் வருகை..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதை அடுத்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். சென்னையில் பெய்த கனமழையில் பாடம் கற்றுக் கொண்ட தமிழக அரசு தென் மாவட்டங்களில் பெய்த கன மழையில்  காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நான்கு மாவட்ட கலெக்டர்கள் மீட்பு பணியை முடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு பணியும் களத்தில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதலாக 8 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து உள்ளதாகவும், அதில் சிறப்பு பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளுடன் தேசிய பேரிடர் மீட்புப்படை நெல்லைக்கு வருகை தந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் உடன் தேசிய பேரிடர் மீட்புப்படை விரைந்துள்ளதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva