1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (16:07 IST)

30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுவர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் முப்பது ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட 8 சிறுவர்களை குழந்தை நல அதிகாரிகள் மீட்டனர்.


 

 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வில், காவல்துறையினருடன் குழந்தைகள் நலத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
 
அப்போது கமலாபுரத்தை அடுத்துள்ள காட்டாறு பாலத்தருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுவனைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அவன் 30 ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமையாக விற்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
 
இதையடுத்து மேலும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுப்பட்டனர். அதில் சாலையோரங்களில் உள்ள பூக்கடைகள், மளிகைக்கடைகளில் வேலை செய்த 7 சிறுவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட 8 சிறுவர்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.