1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 8 Chennai flights are cancel due to rain

கனமழை எதிரொலி: சென்னையின் 8 விமானங்கள் ரத்து!

flights
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் கனமழை பெய்ததால் விமான நிலையத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே குளம் போல் நீர் தேங்கி உள்ளது
 
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டுவிட்டர், ஃபேஸ்புக்கில் வேலை இழந்தவர்கள் இங்கே வாருங்கள்: பிரபல நிறுவனம் அழைப்பு!