வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஜூன் 2020 (08:38 IST)

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் 784 மரணங்கள் – மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகத்தில் கொரோனாவால் பலியாகியுள்ள 954 நபர்களில் 784 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் செல்கிறது. இதுவரை தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,000 ஐ தாண்டியுள்ளது. தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 50,000 ஐ நெருங்குகிறது. இந்நிலையியில் பலி எண்ணிக்கையும் அதிகமாகி 954 ஆக உள்ளது.

இந்த மொத்த பலி எண்ணிக்கையில் 784 பேர் இந்த ஜூன் மாதத்தில் மட்டும் பலியாகியுள்ளார். அதிலும் 114 பேருக்கு எந்தவிதமான இணைநோய்களும் இல்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 30 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 84 பேர் அரசு மருத்துவமனைகளிலும் இறந்துள்ளனர். இந்த 114 பேரில் பெரும்பாலானவர்கள் 50 வயதுக்கு மேலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.