1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (15:47 IST)

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா?

pudhucherry
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் 50க்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா வைரசால் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர் 
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் புதுவை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த aம்மாநில சுகாதாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது