வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:19 IST)

சுகாதாரமற்ற நீரில் சமைத்து சாப்பிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்: கரூரில் பரபரப்பு

கரூர் அருகே கோவில் திருவிழாவில் சுகாதாரமற்ற நீரினை சமைத்து சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்  ஏறபட்டது.


 


கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா பகுதியை சார்ந்த நெரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவின் இறுதி நாளான 12 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடா வெட்டி கறி இன்று வரை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த கிடா வெட்டிற்கு சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகபடுத்தியுள்ளனர் ஆனால் அந்த நீர் மிகவும் கலங்கலாகவும் செந்நிறமாகவும், மாசுபடித்திருந்த நிலையிலும் இருந்து வந்துள்ளது.

ஆனால் அதை அறியாத மக்கள் அந்த தண்ணீரை உணவு சமைப்பதற்கு பயன்படுத்தி சாப்பிட்டுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து இன்று பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர், சம்பவம் அறிந்த சுகாதார துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாம் அமைத்து பாதிக்கபட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.