தமிழகத்தில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

Corona 1
தமிழகத்தில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா
Last Modified வியாழன், 2 ஏப்ரல் 2020 (18:27 IST)
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்த நிலையில் இன்று மட்டும் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் டெல்லி நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்களுக்கு மட்டுமே மிக அதிக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை டெல்லி சென்று திரும்பிய 264 பேர்கள் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ள நிலையில் இன்று மேலும் 74 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :