1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 6895 COVID19 positive cases reported in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 7000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகம்
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 6895 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24,36,819 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6895 பேர்களில் 410பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 194 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 31.580 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 13,156 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 23,48,353 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,65,375 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 315,05,639 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
ஓ.என்.ஜி.சி விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்