1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (18:12 IST)

வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்திருந்த சிலைகள் பறிமுதல்: எத்தனை கோடி மதிப்பு தெரியுமா?

Idols
வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
கும்பகோணத்தில் ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் என்ற கடையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு அந்த சிலைகள் வெளிநாட்டிற்கு ஆவணம் இன்றி கடத்தப்படுவதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
 
இதனையடுத்து ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் கடையில் சிலை தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடை உரிமையாளர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டதாகவும் கடத்தல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த சிலைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்கட்ட விசாரணையில் இந்த சிலைகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது