ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (13:20 IST)

ராமநாதபுரத்தில் 5 பன்னீர் செல்வங்கள் வேட்பு மனுக்கள் ஏற்பு.. ஒருவர் மனு மட்டும் தள்ளுபடி..!

ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட மொத்தம் ஆறு பன்னீர்செல்ம் என்ற பெயரில் போட்டியிட வேட்புமனு  தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் 5 ஓ பன்னீர்செல்வம் வேட்புமனு  ஏற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதன் பிறகு தனி அமைப்பு தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் என்பதும் அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் வேட்புமனு  தாக்கல் செய்த ஒரு சில நாட்களில் தொடர்ச்சியாக அவரது பெயரில் அடுத்தடுத்து ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த தொகுதியில் மட்டும் மொத்தம் ஆறு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்ப மனு தாக்கல் செய்யப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டது \
 
இந்த நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் நான்கு ஓ பன்னீர் செல்வங்கள் என மொத்தம் ஐந்து ஓ பன்னீர் செல்வங்கள் வேட்புமனு  ஏற்று கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
 
 
Edited by Mahendran