வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:08 IST)

15 ஆண்டுகளுக்கு முன்னர் திருடிய புலித்தோல்… 3 கோடிக்கு விற்க முயன்ற கும்பல் கைது!

பொள்ளாச்சி அருகே 40 ஆண்டுகால பழமையான புலித்தோல் விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.

பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக புலித்தோல் ஒன்று விற்கப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அதையடுத்து அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தியதில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரை விசாரித்ததில் அவர்களிடம் 3 கோடி மதிப்பிலான 40 ஆண்டுகால பழமையான புலித்தோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புலித்தோலை விற்க முயன்ற ஆனைமலையை சேர்ந்த பிரவீன், சேத்துமடையை சேர்ந்த உதயகுமார் மற்றும் ரமேஷ் குமார், ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சபரி, சங்கர் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் தந்தையான மயில்சாமி 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் வேலைப்பார்த்த வீடு ஒன்றில் இருந்து அந்த தோலை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.