தேசிய கீதம் - சென்னை தியேட்டரில் எழுந்து நிற்காதவர்களுக்கு அடி, உதை
சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் திரையரங்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காதவர்களை அருகில் இருந்தவர்கள் அடித்து உதைத்தனர்.
திரைப்படம் தொடங்கும் எல்லா திரையரங்கத்திலும் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், அப்போது மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் செயல்படும் திரையரங்கத்தில், திரைப்படம் பார்க்க வந்த 4 நபர்கள் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்கவில்லை. இதனால் அருகில் இருந்த சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே திரையரங்கு மேலாளர் காவல்துரையினரிடம் புகார் அளித்தார். அதன்பின்னர் காவல்துறையினர் அந்த நான்கு நபர்களையும் விசாரணைக்காக அழைத்து சென்றார்.