அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் தமிழகம் பல ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா மீது 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தை காரணம் காட்டி கூடுதல் 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த 50 சதவீதம் வரியால் இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க வணிக நிறுவனங்கள் பின் வாங்கியுள்ளன. திருப்பூர் ஆயத்த ஆடைகள், தூத்துக்குடி இறால் ஏற்றுமதி என பல தமிழகம் சார்ந்த தொழில்கள் இதனால் வருவாய் வாய்ப்பை இழக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழகத்திற்கு ஏற்படப்போகும் இழப்பு குறித்து தமிழ்நாடு அரசின் Guidance Tamilnadu கணக்கிட்டுள்ளது. அதன்படி, இந்த வரிவிதிப்பு தொடர்ந்தால் 2025 - 2026 நிதியாண்டில் தமிழ்நாடு ரூ.32,642 கோடி இழப்பை சந்திக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயத்த ஆடைகள் துறையில் மட்டும் ரூ.14,280 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K