வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (08:03 IST)

வெற்றிகரமாக 300வது நாள்: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாதது ஏன்?

இன்று வெற்றிகரமாக 300வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 10 மாதங்களாக சென்னை உள்பட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும்.
 
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீத சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்துள்ளது என்பதும் அதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை விற்பனை ஆகி வருகிறாது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.64 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva