செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (14:36 IST)

தாமிரபரணி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு - மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் தற்பொழுது நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், இன்று (29.11.2021) மாலைக்குள் அதிகளவு நீர் வரத்து இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எனவே கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், யாரும் ஆற்றுப் பகுதிக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதற்கும் நீந்துவதற்கும் செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.