செவ்வாய், 29 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2024 (19:05 IST)

சென்னையில் ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!

Arrest
சென்னையில் ரூ.27 கோடி மதிப்புள்ள, 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்  செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே விஜயகுமார், மணிவண்ணன் என்ற இருவரிடம் இருந்து 1.9 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரும் கைதாகியுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள மணிவண்ணனின் வீட்டில் இருந்து 900 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
கன்னியாகுமரி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த விஜயகுமார், போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தூள்ளது.
 
மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva